பல்லவி
தண்ணீரில் உன்
பயணம்
கண்ணீரில் என்
பயணம்
கட்டுமரமாக நீயங்கு
பட்டமரமாக நானிங்கு
கரை திரும்புவாயோ
–என்னை
கரை சேர்ப்பாயோ
புரியாமல்
புலம்புகிறேன்
புலம்பலிலே நா உலருகிறேன்
சரணம்-1
சமுத்திரத்தின்
பெரும் உப்பு –என்
ஒரு சொட்டு
கண்ணீரின் சிறு பங்கு
கடல் அலையின்
கொந்தளிப்பு –என்
ஒரு நொடி
துடிப்பில் சிறு பங்கு
ஆயிரம் அலைகள்
அடிக்கும் கரையினிலே
பல்லாயிரம் அலைகள்
அடிக்கும் நெஞ்சினிலே
கடலினிலே மறைகிறான்
என் சூரியன்
நான் கரையினிலே
அவன் நினைவினிலே
வாடிடும் கருவாடு
சரணம்-2
கட்டுமரத்தின்
அலைக்கழிப்பு –என்’
ஒருநாள்
தவிப்பினில் கால் பங்கு
துறைமுகத்தில் பரபரப்பு –என்
நெஞ்சம் முழுக்க
துடிதுடிப்பு
ஆயிரம் உயிர்கள்
சுமக்கும் கடல் தாயே
என் மன்னவன்
உயிருக்கு துணை நீயே
கண்ணீரிலே கரைகிறது
வெண்ணிலவு
நான் கரையினிலே
அவன் நினைவினிலே
அல்லாடும் சிறு
எறும்பு
No comments:
Post a Comment