Saturday, September 28, 2019

திரைப்படத்திற்கு எழுதிய மற்றொரு பாடல் பாடலின் சூழல் பள்ளி முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் இதில் நாயகன் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு வாழ்க்கையை கல்லூரியில் தேடுபவன் நாயகியோ கொஞ்சம் முதிர்ச்சி உடையவள் இருவரும் சந்திக்கும் இடத்தில் மாணவர்கள் அதாவது ஆண் பெண் மற்றும் ஆசிரியர்கள் கலந்து பாடுவதுபோல் ஒரு பாடல் வேண்டுமென இயக்குனர் கேட்க நான் எழுதி மெட்டமைத்த பாடல் பல்லவி ஆண் கல்விகற்கும் சோலை கல்லூரி சாலை நாங்கள் இங்கு புதுமுகங்கள் பெண் நட்பை கற்கும் சாலை கல்லூரி சாலை நித்தம் நித்தம் அறிமுகங்கள் ஆண் சுய அறிமுகத்திற்கு செவிகொடுத்தோம் சில அறுவைகளுக்கு செவி அடைத்தோம் பெண் சில அறிமுகத்திற்கு கை கொடுத்தோம் சில அறிமுகத்திற்கு கைகுவித்தோம் குழு வகுப்பு என்னும் குடும்பத்தில் உறுப்பினர் ஆனோம் சரணம் -1 ஆண் அழகிய பெண்களிடம் நெஞ்சம் மயங்கி அறிமுகம் செய்திடுவோம் கொஞ்சம் தயங்கி பெண் சீனியர் ராக்கிங்கில் கண்கள் கலங்கி வகுப்பறை நுழைகையில் கொஞ்சம் மிரட்சி ஆண் யூனிபார்ம் போயாச்சு ஹோம்வொர்க் போயாச்சு பெண் பின்னல் ஜடை போயாச்சு லூஸ் ஹேரே ஸ்டைலாச்சு ஆண் எங்கள் hodஐ அரக்கனாக பார்க்கிறோம் பெண் எங்கள் hodஐ தெய்வமாக தொழுகிறோம் ஆசிரியர் பள்ளிக்கூட பிரம்பு இல்லாததால் குறும்பு வாலை நறுக்கவே இருக்கு இன்டர்னல் மார்க் சரணம்-2 பெண் ஜோவியல் பேச்சுக்கள் கொஞ்சம் கவர்ச்சி ஹார்மோன்கள் செய்திடும் இன்ப கிளர்ச்சி ஆண் டூவீலர் பயணத்தில் சிட்டாய் பறந்து அச்சமூட்டி ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி பெண் பேதங்கள் போயாச்சு ஆணும் பெண்ணும் ஒன்றச்சு ஆண் கட்டெலாம் பழசாச்சு சைட் மட்டுமே லைஃப் ஆச்சு பெண் எங்கள் காலேஜோ நண்பர்களின் வேடந்தாங்கல் ஆண் எங்கள் காலேஜ் கலர்களின் வேடந்தாங்கள் குழு கூலாங்கல்லு சிரிப்பு கொஞ்ச நேரம் படிப்பு வாலிப பருவ ஆட்டோகிராஃப் காலேஜ் லைஃப்

Wednesday, January 16, 2019

மன்மத வித்தையின் மைதானம்


பல்லவி
குழு: தேகம் தேகம்  அழகிய தேகம் தேகம் தேகம்
     வேகம் வேகம் விரலில் வேகம்  ஏறும் ஏறும்

பெண்: மன்மத வித்தையின் மைதானம் –இது
      மன்னவர் ஆண்டிடும் ராஜாங்கம்
      கந்தர்வ இரவுகள் கவிபாடும் –இங்கு
      வாத்சாயணன் சூத்திரம் அரங்கேறும்
      வசந்தசேனை பந்தாடும் இடம்-இது
      விஸ்வாமித்திரன் விழுந்த இடம்

     சரணம்-1
பெண்: சூரியன்கள் காலில் விழுந்து
 கதறும் அழகு நிலவிது.
 தேன் துளிகள் பாலில் கலந்து
 சொட்டும் அழகு மலரிது

குழு:  கட்டில் மெத்தை மேலே கண்ட பொக்கிஷம்-இதை
      சிணுங்கி சிரிக்க வைக்கும் ஆணின் சில்மிஷம்

பெண்: காளை  உள்ளம் காதல் வெள்ளம்
      நீந்திய பிறகே குளியல் கொள்ளும்
      இங்கு ஆண்மை கப்பல் பெண்மை கடலில்
      மூழ்கிய பிறகே நங்கூரம் இடும்
      உயிரணு உரச சரசங்கள் பயில
 நல்ல பல்கலைக்கழகம் இவள்.

சரணம்-2
பெண்: மாதவிகள் காலில் சிலம்பு
 அணியும் மடமை கோவலன்கள்
 கண்ணகியின் காதல் மறந்து
 அழியும் கொடிய கேவலன்கள்

குழு:  பிரம்மன் வடித்து வைத்த அழகின் கொள்கலன் –இதில்
      நிரம்பி வழிந்து கிடக்கும் காமன் மதுரசம்

பெண்: ஆணின் கண்கள் பெண்ணின் உடலில்
 ஊர்ந்து சென்றே சல்லாபம் கொள்ளும்
 அட பெண்மை கடவுள் ஆண்மை பக்தன்
 நித்திரை இல்லாத தரிசனம் தரும்
 உலகத்தை வெல்ல சாத்தான் செய்த
 கன்னி வெடிகுண்டு இவள்.

Monday, January 14, 2019


பல்லவி
தண்ணீரில் உன் பயணம்
கண்ணீரில் என் பயணம்
கட்டுமரமாக நீயங்கு
பட்டமரமாக நானிங்கு
கரை திரும்புவாயோ –என்னை
கரை சேர்ப்பாயோ
புரியாமல் புலம்புகிறேன்
புலம்பலிலே நா உலருகிறேன் 

சரணம்-1
சமுத்திரத்தின் பெரும் உப்பு –என்
ஒரு சொட்டு கண்ணீரின் சிறு பங்கு
கடல் அலையின் கொந்தளிப்பு –என்
ஒரு நொடி துடிப்பில் சிறு பங்கு
ஆயிரம் அலைகள் அடிக்கும் கரையினிலே
பல்லாயிரம் அலைகள் அடிக்கும் நெஞ்சினிலே
கடலினிலே மறைகிறான் என் சூரியன்
நான் கரையினிலே அவன் நினைவினிலே
வாடிடும் கருவாடு

சரணம்-2
கட்டுமரத்தின் அலைக்கழிப்பு –என்’
ஒருநாள் தவிப்பினில் கால் பங்கு
துறைமுகத்தில்  பரபரப்பு –என்
நெஞ்சம் முழுக்க துடிதுடிப்பு
ஆயிரம் உயிர்கள் சுமக்கும் கடல் தாயே
என் மன்னவன் உயிருக்கு துணை நீயே
கண்ணீரிலே கரைகிறது வெண்ணிலவு
நான் கரையினிலே அவன் நினைவினிலே
அல்லாடும் சிறு எறும்பு





2017 இல் பல்லவியை மட்டும் எழுதி விட்டு அப்படியே விட்ட பாடலை இன்று நிறைவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் முடித்த பாடல்


        பல்லவி

ஆண்:    ஜுனிலே ஒரு அடை மழையில்
நீயும் நானும் ஒரு குடையில் (...)
நனையாமல் இருக்க  நெருங்கி வந்தோம்-பின்
நெருங்காமல் இருக்க விலகி சென்றோம்
                நனையவா நெருங்கவா சொல் தோழி

பெண்:  ஜுனிலே ஒரு அடை மழையில்
நீயும் நானும் ஒரு குடையில் (...)
நனையாமல் இருக்க  நெருங்கி வந்தோம்-பின்
நெருங்காமல் இருக்க விலகி சென்றோம்
தயக்கமேன் நெருங்கி வா என் தோழா


 சரணம்-1

ஆண்:     மண்ணிலே மழைத்துளி  எழுப்பும் சப்தம்
சொ ட்  சொ ட்  சொட்-உன்
நெஞ்சிலே  நெருக்கத்தின் சப்தம்
சொல் சொல் சொல்

பெண்: தோழனே தோழனே  ஏன் விரைகிறாய்
சொல் சொல் சொல்- இந்த
நெருக்கம்  நீடிக்க  வேண்டும்
நில் நில்  நில்

ஆண்:  குடையுடன் நடக்கும் வெண்ணிலவு
இதுவே இதுவே நல்லிரவு

பெண்: என் இணையுடன் நடக்கும் முதலிரவு
`நேரமோ நேரமோ நள்ளிரவு

ஆண்:     உன் நெருக்கத்தாலே சிறு தடுமாற்றம் கண்ணே
விட்டு விலகவா இல்லை தொடரவா  சொல் தோழி

சரண,ம்-2

பெண்: சிதறிடும் சாரலில்  ஒதுங்கிட ஓரிடம்
சொல் சொல் சொல்—உன்
ஸ்பரிசத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிட
வழி சொல் சொல்

ஆண்:  குதித்தெழும்  குமிழிகள் உடைந்திடும் சப்தம்
டப் டப் டப் –மனதில்
துளிர்விடும்  ஆசையை உடைத்திட
வழி சொல் சொல்

பெண்: குடையுடன் தொடங்கும் நம் பயணம்
தொடருமா தொடருமா வாழ்நாள் முழுதும்

ஆண்:    நீடிக்கும் நீடிக்கும் ஒரு நிசப்தம்
கலைத்திடு கலைத்திடு மனம் உரைக்கும்

பெண்: மௌனத்தானே  என்னுள் வழிந்தோடும்  அன்பே
விட்டு விலகவா இல்லை தொடரவா  சொல் தோழா



Saturday, January 12, 2019

2005 ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு பாடல் சில மேடைகளில் பாடப்பட்டு பின் மகளிர் சிந்தனை என்னும் இடதுசாரி இதழில் மார்ச் 2006 இல் வெளிவந்தது

2005 ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு பாடல் சில மேடைகளில் பாடப்பட்டு பின் மகளிர் சிந்தனை என்னும் இடதுசாரி இதழில் மார்ச் 2006 இல் வெளிவந்தது
பெண் சிசுவுக்கொரு தாலாட்டு
பல்லவி
தாலேலோ இளங்கிளியே
என்னாச்சு அழுவுறியே
காலாலே உதைக்குறியே
பாடாக படுத்தறியே
என்னன்னு நானும் பாட
என் நெஞ்சத்தை நெருப்பு வாட்ட
சரணம் 1
பீடியால சூடு வெச்ச உங்கப்பன் கதை சொல்லட்டா.....
பொட்டையினு குட்டி வெச்ச எங்கப்பன் கதை சொல்லட்டா.....
பள்ளிக்கூடம் போனபோது என் பாட்டன் அடக்கி வெச்சான்....
பட்டிணத்தில் படிச்ச தம்பி பட்டிக்காடுனு ஒதுங்கி நின்னான்.....
வரதட்சணை தரமுடியாம நாலு வரன் தள்ளிப் போச்சு.....
குடிகாரனுக்கு வாக்கப்பட்டு உடம்பெல்லாம் வெந்துப் போச்சு.....
பொட்டைக்கோழி முட்டைக்குத்தான் பழமொழி நெசமாச்சு....
பட்டித்தொட்டி எங்கும் பெண்ணின் நிலை இதுவாச்சு.....
சரணம் 2
சொல்லால ஆணியடிச்ச உன் பாட்டிக் கதை சொல்லட்டா.....
மருமகளை அறுத்துவிட்ட உன் பாட்டன் கதை சொல்லட்டா...்
பேச்சுவாக்கில் கொழுந்தியாள் கள்ளிப்பால் கொடுக்கச் சொன்னாள்.....
அடுத்த வீட்டு முனியம்மாவோ நெல்லுமணி கொடுக்கச் சொன்னாள்....
மனவருத்தம் தாளவில்லை அரளி விதை அரைச்சி வெச்சேன்.....
பச்சை மண்ணை பார்த்து பார்த்து வைராக்கியம் வளர்த்துக் கிட்டேன்.....
பொட்டப்புள்ள அடுப்பு ஊதத்தான் சொன்னவனை நாவறுக்கணும்-நீ பட்டமெல்லாம் படிச்சு படிச்சு பெரியவளானதும் நாடாளணும்.....