பல்லவி
நீ விடுகதையா ?
விடை சொல்ல என் மனம் துடிக்கிறதே
நீ தொடர்கதையா ?
தொடர்ந்திட பேராவல் எழுகின்றதே
நீ திகில் கதையா ?
நினைத்திட மெல்லிய அச்சம் வருகின்றதே
நீ திரைக்கதையா ?
திருப்பங்கள் திண்டாட வைக்கின்றதே
பெண்ணெனும் கதையில் சுவாரசியங்கள்
குவிந்து கிடக்கிறதே ..........
சரணம்=1
பல்சுவை கதையோ நீ?
பல ரசனை உன்னுள் ஐக்கியம் ஆகியுள்ளதே
சரித்திர கதையோ நீ?
வரலாறும் பெண்ணுள் புதையுண்டு கிடக்கிறதே
சிறுத்த இடுப்பு சிறுகதையோ -என்
சிந்தனை சிதறி போகிறதே
பவள மடிப்பு பத்திகளோ -அதில்
படைப்பு இலக்கணம் தெரிகிறதே
பிரம்மன் இயக்கிய திரைப்படம் ஒன்று
பெண்ணெனும் பெயரில் உலவியதே ......
சரணம்-2
தொலைக்காட்சி கதையோ நீ?
உன்னை நினத்தால் கண்ணீர் வருகிறதே
சிந்துபாத்தின் கதையோ நீ ?
முடிவினை தேடி என் முகவரி தொலைகிறதே
சிவந்த இதழ்கள் சித்திரமோ -ஓவிய
வடிவில் அழகாய் கதை சொல்லுதே
ஆடையென்ன மர்ம கதையோ -அதில்
துப்பறிய கண்கள் முயலுதே .....
இறைவனெனும் புனைபெயர் கொண்ட
எழுத்தாளளின் சிறந்த படைப்பு இவள் .........