பல்லவி
மலர்களை கொல்லும் மாவீரா- செல்ல
கொலைகள் செய்யும் போர்வீரா
இதழ்களை கொய்யும் காண்டீபா -மெல்ல
இதயங்கள் வெல்லும் செயல் வீரா
பல ஆயிரம் பெண்களை வென்றவனே -உன்
ஆண்மைக்கு பரணி பாடிடவா?
நூறாயிரம் விருதுகள் சுமந்தவனே -நான்
செல்ல பெயரிட்டு உன்னை அழைத்திடவா?
சரணம்-1
மோகினிகள் மோகம் கொள்வர்
சுந்தரிகள் சொக்கிப் போவர்
அகலிகைகள் ஆயிரம் உள்ளனர் ஊரினிலே
விமோசனங்கள் நீயும் தந்தாய் காதலிலே
ரதியும் கூட வற்றிய நதியே ஏக்கத்தில்
மதியும் கூட தேய்ந்த மதியே வானத்தில்
மின்னி மறையும் மீன்கள் நடுவே
துருவ நட்சத்திரம் நீயல்லவா -என்னை
ஏற்று கொள்வாய் என் மன்னவா ....................
சரணம்=2
மேனகைகள் மௌனம் கலைப்பார்
ஊர்வசிகள் உற்சாகம் கொள்வர்
கவிதைகள் ஆயிரம் உள்ளது புரட்டிடவே
மலரினங்கள் வாசம் அழைக்கும் முகர்ந்திடவே
தும்மல் கூட அற்புத இசையே சரசத்தில்
விக்கல் கூட விஞ்ஞான விசையே காதலில்
தொல்லை கொடுக்கும் ஆண்கள் நடுவே
விசுவாமித்திரன் நீயல்லவா -உந்தன்
தவம் கலைப்பேன் என்னை சபிப்பாயா ?
மலர்களை கொல்லும் மாவீரா- செல்ல
கொலைகள் செய்யும் போர்வீரா
இதழ்களை கொய்யும் காண்டீபா -மெல்ல
இதயங்கள் வெல்லும் செயல் வீரா
பல ஆயிரம் பெண்களை வென்றவனே -உன்
ஆண்மைக்கு பரணி பாடிடவா?
நூறாயிரம் விருதுகள் சுமந்தவனே -நான்
செல்ல பெயரிட்டு உன்னை அழைத்திடவா?
சரணம்-1
மோகினிகள் மோகம் கொள்வர்
சுந்தரிகள் சொக்கிப் போவர்
அகலிகைகள் ஆயிரம் உள்ளனர் ஊரினிலே
விமோசனங்கள் நீயும் தந்தாய் காதலிலே
ரதியும் கூட வற்றிய நதியே ஏக்கத்தில்
மதியும் கூட தேய்ந்த மதியே வானத்தில்
மின்னி மறையும் மீன்கள் நடுவே
துருவ நட்சத்திரம் நீயல்லவா -என்னை
ஏற்று கொள்வாய் என் மன்னவா ....................
சரணம்=2
மேனகைகள் மௌனம் கலைப்பார்
ஊர்வசிகள் உற்சாகம் கொள்வர்
கவிதைகள் ஆயிரம் உள்ளது புரட்டிடவே
மலரினங்கள் வாசம் அழைக்கும் முகர்ந்திடவே
தும்மல் கூட அற்புத இசையே சரசத்தில்
விக்கல் கூட விஞ்ஞான விசையே காதலில்
தொல்லை கொடுக்கும் ஆண்கள் நடுவே
விசுவாமித்திரன் நீயல்லவா -உந்தன்
தவம் கலைப்பேன் என்னை சபிப்பாயா ?