இராது சங்கரவர்மன் பக்கங்கள்
Friday, August 22, 2025
வாடி வாடி மிருதுளா-
Sunday, January 12, 2025
வேர்களை தேடி
Friday, June 4, 2021
தொரவதி
அவன் பேசிக்கொண்டு இருநதான்
அவன் பேசிக்கொண்டு இருந்தான்
ஏகாந்தத்தின் ஒலிகளை முழுக்க முழுங்கும்
பெரும் பசியோடு பேசிக்கொண்டு இருந்தான்
தீராத தாகத்தில் வறண்ட உதடுகளை
ஈரப்படுத்தும் வார்த்தை ஒன்றை பேசிக்கொண்டு இருந்தான்.
சூழிற்குள் இருள் துரத்த கால் உதைக்கும் கருவாக
தாலாட்டில் வயப்பட்டு பசி மறக்கும் சேயாக
வசப்பட்ட வாழ்வின் கனிமலர் தவிர்த்த அடிவேராக
எப்படி முடிகிறது ஒருவனால்
மகிழ்ச்சியாக அழுகையாக சோகமாக கோபமாக செல்லமாக பரிதவிப்பாக
ஒப்பனையின்றி உயிரில் இருந்தும் ஒற்றை வார்த்தையை
அவன் பேசிக்கொண்டு இருந்தான்
அவன் பேசிக்கொண்டு இருந்தான்
அம்மா அம்மா அம்மா
Saturday, February 1, 2020
தண்ணீரில் உன் பயணம்
பல்லவி
தண்ணீரில் உன் பயணம்
கண்ணீரில் என் பயணம்
கட்டுமரமாக நீயங்கு
பட்ட மரமாக நான் இங்கு
கரை வருவாயோ கரை ஒதுங்குவாயோ புரியாமல் புலம்புகிறேன்
புலம்பலிலே நா உலருகிறேன்
சரணம் 1
சமுத்திரத்தின் பெரும் உப்பு
என் ஒரு சொட்டு கண்ணீர் சிறுபங்கு
கடல் அலையின் கொந்தளிப்பு
என் ஒருநொடி துடிப்பில் சிறு பங்கு
ஆயிரம் அலைகள் அடித்திடும் கரையினிலே பல்லாயிரம் அலைகள் அடிக்கும் நெஞ்சிநிலே கடலினிலே மறைகிறான் என் சூரியன்- நான் கரையினிலே அவன் நினைவினிலே
வாடிடும் கருவாடு
சரணம் 2
கட்டுமரத்தின் அழைகழிப்பு
என் ஒரு நொடி தவிப்பில் கால் பங்கு துறைமுகத்தின் பரபரப்பு
என் ஒவ்வொரு அணுவிலும் அரைப்பங்கு ஆயிரம் உயிர்கள் இருக்கும் கடலினிலே என் மன்னவன் உயிர் இருக்கும் என்னுள்ளே
கண்ணீரில் கரைகிறது வெண்ணிலவு- நான் கடலினிலே அவன் நினைவினிலே
அல்லாடும் கட்டெறும்பு
Friday, January 31, 2020
நேற்று ஓர் சூரியன்
பல்லவி
நேற்று ஒரு சூரியன்
என்னை சுட்டெரிக்காமல் நனைத்ததென்ன
இன்று ஒரு சந்திரன்
என்னை குளிர்விக்காமல் சுட்டதென்ன
பல நூறு ஆண்கள் செல்லும் பாதையில்
இவன் மட்டும் பளிச்சென்று தெரிந்ததென்ன
பற்பல ஆண்கள் கடந்த வாழ்க்கையில்
இவன் மட்டும் சட்டென்று கவர்ந்ததென்ன
நெஞ்சை பிளந்ததென்ன
சரணம் 1
பற்பசை விளம்பரம் செய்பவனா
பளீரென சிரிக்கின்றான்
சொற்களை வியாபாரம் செய்பவனா
கவிஞனாக தெரிகின்றான்
இதயத்தைப் பறித்தானே
வழிப்பறி கொள்ளையனோ
மனதை கவர்ந்தானே
கண்ணம் வைப்பவனோ
குருதியில் தீ மூட்டி ரசிக்கும் கலவரக்காரனோ
என்னை நான் மறந்தேன்
வைத்தியக்காரன் இவன் தானோ
பெண்ணை கண்டுகொள்ளாத பைத்தியக்காரனா
கொஞ்சம் ஒதுங்கி இருக்கும் பத்தியக்காரனா காதல் பதியக்காரனா
சரணம் 2
பூக்களை பறித்து விற்பவனா
இதழ்களை பறிக்கிறான்
கற்களை விற்பனை செய்பவனா
கல்நெஞ்சனாக இருக்கிறான்
மயக்கத்தைக் கொடுத்தானே
மது விற்பனையாளனா
எதையோ எதிர்பார்த்தானே
அரசாங்க ஊழியனா
சுருதியில் பெயர் சொல்லி அழைக்கும்
இசை அமைப்பாளனா
கிறக்கத்தில் என்னவோ நான் செய்தேன் கிராதகன் இவன் தானா
பெண்ணை தவிக்க வைக்கும் தந்திரக்காரனா
நாற்புரத்தில் அலைய வைக்கும் நாசக்காரனா நாளையென் சொந்தக்காரனா
Thursday, January 30, 2020
விதியென்னும் குழந்தை
பல்லவி
விதியென்னும் குழந்தை விளையாடும் விளையாட்டு பொம்மை உலகம்
சந்தர்ப்ப சூழ்நிலை சதிராடும்
சதுரங்க அட்டை வாழ்க்கை
ஏணிக்கும் பாம்புக்கும் நடுவே
உதைபடும் பந்து மனிதன்
ஏட்டிக்கும் போட்டிக்கும் நடுவே
மிதிபடும் ஜந்து மனிதன்
பரமனை ஆடும் பரமபதம்
இதில் வெற்றியை சுவைப்பது பரமசிவம்
சரணம் 1
கண்ணீரில் பிறந்து கண்ணீரில் முடியும் மண் வாழ்வு
இதில்
தண்ணீரில் மிதந்து தத்தளிக்கும் சிறு எறும்பு நம் வாழ்வு
பன்னீரில் குளித்து பணநீரில் மிதக்கும் சிலர் வாழ்வு
மலர்
மஞ்சத்தில் புரண்டு மருந்துண்டால் தானே நல்லிரவு
வேர்வையில் கரைந்து வெக்கையில் புழுங்கும் விவசாயி
குடிப்பது
கூழ் என்றாலும் மோர் என்றாலும் சுகவாசி
பலதேசம் செல்வதும் பலகாரம் தின்பதும் யார் செயலோ
பல தோஷம் பார்ப்பதும் பழஞ்சோறு தின்பதும் யார் செயலோ
மனிதன் காற்றிலாடும் காத்தாடி ஆட்டுவிக்கிறான் ஒரு கூத்தாடி
சரணம் 2
அச்சத்தில் பிறந்து அச்சத்தில் முடிக்கும் நம்வாழ்வு
நாம்
நம்பிக்கை இழந்து அஞ்சி வாழும் வெந்த சுண்ணாம்பு
உச்சத்தில் கொடுத்து புண்ணியம் தேடும்
சிலர் வாழும்
அதில் மிச்சத்தை சேர்த்து சொத்து ஆக்குவது தானே நிலைப்பாடு
மஞ்சத்தில் மலர்ந்து மஞ்சத்தில் கருகும் விபச்சாரி
செய்வது தவறு என்றாலும் சரி என்றாலும் சன்யாசி
வெளிவேடம் அணிவதும் உள்நோக்கம் கொள்வதும் யார் செயலோ
மகான் என்று சொல்வதும் பகல் கொள்ளை அடிப்பது யார் தவறோ
மனிதன் காற்றிலாடும் ஒரு காத்தாடி
ஆட்டுவிக்கிறான் ஒரு கூத்தாடி