Monday, June 5, 2017

கோமளவள்ளி அடியே கோமலவள்ளி




             பல்லவி
கோமளவள்ளி  அடியே கோமலவள்ளி –நீ
கோடம்பாக்கத்துக்கு வாடி வாடி
கோமலவள்ளி  அழகே சுந்தரவள்ளி-நீ
கோடம்பாக்கத்துக்கு வாடி வாடி
இங்கோ கதாநாயகிக்கு பஞ்சம் பஞ்சம்
நீயும் வந்தால் தலைமேல வெச்சு கொண்டாடும்
உன் கோலிவுட்டு அழகுக்கு பாலிவுட் பவுசுக்கு
ஹாலிவுட்டே க்யுவில் நின்னு கால்ஷீட்டை கேட்கும்




                  சரணம்-1
உம்முன்னு சொன்னா ரசிகர் மன்றம் ஆரம்பிப்போமே –அதை  
ஜம்முனு சொன்னால் கோவில்கட்டி கும்பிடுவோமே
ஸ்க்ரீனில் வந்தால் விசிலடிச்சு ஆதரிப்போமே –அட
தேர்தலில் நின்றால் கொடிபிடித்து வாக்களிப்போமே
ஆதம்பாக்கம் அல்வாத்துண்டு கோடம்பாக்கத்தில்
ஆறுமுதல் ஆண்களெல்லாம் தியேட்டர்  வாசலில்
மீனம்பாக்கம் ரன்வே வரும் வீட்டு வாசலில்
நோட்டு மழை பொழியுமடி உந்தன் தோட்டத்தில்
அடி கனவு கன்னியே
கந்தர்வ கன்னியே
producer வயிற்றிலே பால் வார்ப்பாயா
ரசிகர்கள் கண்களிலே தேன் வார்ப்பாயா


                    சரணம்-2
ஜில்லுனு வந்தால் சளி பிடிச்சு தும்பிடுவோமே
கம்முனு வந்தால் கோபம் கொண்டு கல்லெறிவோமே
field க்கு வந்தால் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவோமே
industryஇல் உனக்கு நிகர் யாரும் இல்லையே
ஆண்டுதோறும் புதுமுகங்கள் நூறு வந்தது
யாரு அதில் சினிமாவில் நிலையாக நின்றது
நண்டு ஊறும் நரி ஊறும் கதைகள் வந்தது
கதாநாயகிகள் இல்லாத படமெது வென்றது
அடி காந்த கன்னியே
கவர்ச்சிக்  கன்னியே
ரசிகர்கள் எமக்காக நடிக்க வருவாயா
நடிகைகள் மனதிலே புளியை கரைப்பாயா

எழுதி வெச்சிக்கோ எழுதி வெச்சிக்கோ




            பல்லவி
எழுதி வெச்சிக்கோ எழுதி வெச்சிக்கோ
காதலை மனசுக்குள் எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ எழுதி வெச்சிக்கோ
முத்தங்களை உதட்டில் எழுதி வெச்சிக்கோ
கனவுகளை தூக்கத்தில் எழுதி வெச்சிக்கோ
காட்சிகளை கண்களுக்குள் எழுதி வெச்சிக்கோ
செலவுகளை கணக்கில் எழுதி வெச்சிக்கோ
சேமிப்பையும் கணக்கில் எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ  எழுதி வெச்சிக்கோ
அரசியல் பேச்சை தண்ணி மேல எழுதி வெச்சிக்கோ

            சரணம்-1
ரகசியத்தை அழியும்படி எழுதி வெச்சிக்கோ
நம்பிக்கையை அழியாதபடி எழுதி வெச்சிக்கோ
வெற்றிகளை  பென்சிலாலே எழுதி வெச்சிக்கோ
தோல்விகளை கல்வெட்டாக எழுதி வெச்சிக்கோ
எழுத வேண்டியதெல்லாம் டைரியில எழுதி வெச்சிக்கோ
எழுத கூடாததெல்லாம் மூளையில எழுதி வெச்சிக்கோ
மறக்க வேண்டியதெல்லாம்  slateல எழுதி வெச்சிக்கோ
மறக்க கூடாததெல்லாம் மண்டையில எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ  எழுதி வெச்சிக்கோ
உறுதி பாய்ந்த உள்ளத்தை எழுதி வெச்சிக்கோ

              சரணம்-2
துக்கங்களை விழிநீரில் எழுதி வெச்சிக்கோ
சந்தோசத்தை புன்னகையில் எழுதி வெச்சிக்கோ
சுற்றங்களை சுகங்களில் எழுதி வெச்சிக்கோ
நண்பர்களை ஆபத்தில் எழுதி வெச்சிக்கோ
சொல்ல முடிஞ்சதெல்லாம் நாக்குல எழுதி வெச்சிக்கோ
சொல்ல கூடாததெல்லாம் வாட்ஸ் அப்பில் எழுதி வெச்சிக்கோ
நன்மை செஞ்சவனை நெஞ்சில் எழுதி வெச்சிக்கோ
தீமை செஞ்சவனை நரம்பில் எழுதி வெச்சிக்கோ
எழுதி வெச்சிக்கோ  எழுதி வெச்சிக்கோ
மனிதாபிமானத்தை மனசுக்குள் எழுதி வெச்சிக்கோ



Thursday, June 1, 2017

மன்னாதி மன்னனெல்லாம் மண்ணு தின்ன போர்க்களம்



                   பல்லவி
மன்னாதி மன்னனெல்லாம் மண்ணு தின்ன போர்க்களம்
என்னோட தேகம் அல்லவா
வில்லாதி வில்லனெல்லாம் வீழ்ச்சி கண்ட போர்க்களம்
என்னோட தேகம் அல்லவா
 ராஜாதி ராஜனின் ரகசியங்கள் என்னிடம்
சூராதி சூரனின் சூத்திரங்கள் என்னிடம்
தேவாதி தேவனின் வரங்களும் என்னிடம்
அசுராதி அசுரனின் சாபங்களும் என்னிடம்
அழகுக்கு நான் தானே உலகத்தில் முதலிடம்

                 சரணம்-1
படச்சவனும் என்னை பார்த்தால் மிரட்சி அடைவான்
படைப்பு தொழிலை தற்காலிகமாக தள்ளி வைப்பான்
மன்மதனும் என்னை பார்த்தால் அதிர்ச்சி அடைவான்
ரதிதேவியை மறந்துவிட்டு என் பின்னால் வருவான்
நான் புள்ளிவைத்து கோலம் போட்டால் வீதியெங்கும் ஆண்கள் கூட்டம்
நான் உதட்டை சுளித்து பேசும் பேச்சின் நச்சுத்தன்மை ஆளை கொல்லும்
ஆண்கள் இதயம் கண்ணாடி சீசா-அதை
எந்தன் விழிகள் உடைக்கும் சுக்குநூறா

                  சரணம்-2
அரிச்சந்திரன் என்னை பார்த்தால் மாற்றம் அடைவான்
 தன் மெய்மொழிகள் மறந்து விட்டு பொய்யே பேசுவான்
கந்தர்வனும் என்னை பார்த்தால் கலக்கம் அடைவான்
இதயத்தை கவர்ந்ததாக குற்றம் சாட்டுவான்
நான் குழாயடியில் தண்ணீர் பிடித்தால் குடத்தில் எல்லாம் காதல் வெள்ளம்
தலை குளித்து விட்டு கோவில் சென்றால் அபிசேகங்கள் எனக்கு வரும்
ஆண்கள் எல்லாம் தூக்கட்டும் கூஜா-நான்
நவீன யுகத்து கிளியோபாட்ரா