பல்லவி
ஆண்: ஜுனிலே ஒரு அடை மழையில்
நீயும் நானும் ஒரு குடையில் (...)
நனையாமல் இருக்க நெருங்கி வந்தோம்-பின்
நெருங்காமல் இருக்க விலகி சென்றோம்
நனையவா நெருங்கவா சொல் தோழி
பெண்: ஜுனிலே ஒரு அடை மழையில்
நீயும் நானும் ஒரு குடையில் (...)
நனையாமல் இருக்க
நெருங்கி வந்தோம்-பின்
நெருங்காமல் இருக்க விலகி சென்றோம்
தயக்கமேன் நெருங்கி வா என் தோழா
சரணம்-1
ஆண்: மண்ணிலே மழைத்துளி எழுப்பும் சப்தம்
சொ ட் சொ ட் சொட்-உன்
நெஞ்சிலே நெருக்கத்தின் சப்தம்
சொல் சொல் சொல்
பெண்:
தோழனே தோழனே ஏன் விரைகிறாய்
சொல் சொல் சொல்- இந்த
நெருக்கம் நீடிக்க வேண்டும்
நில் நில் நில்
ஆண்: குடையுடன் நடக்கும் வெண்ணிலவு
இதுவே இதுவே நல்லிரவு
பெண்:
என் இணையுடன் நடக்கும் முதலிரவு
`நேரமோ நேரமோ நள்ளிரவு
ஆண்: உன் நெருக்கத்தாலே சிறு தடுமாற்றம் கண்ணே
விட்டு விலகவா இல்லை தொடரவா சொல் தோழி
சரண,ம்-2
பெண்:
சிதறிடும் சாரலில் ஒதுங்கிட ஓரிடம்
சொல் சொல் சொல்—உன்
ஸ்பரிசத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கிட
வழி சொல் சொல்
ஆண்: குதித்தெழும்
குமிழிகள் உடைந்திடும் சப்தம்
டப் டப் டப் –மனதில்
துளிர்விடும் ஆசையை
உடைத்திட
வழி சொல் சொல்
பெண்:
குடையுடன் தொடங்கும் நம் பயணம்
தொடருமா தொடருமா வாழ்நாள் முழுதும்
ஆண்: நீடிக்கும்
நீடிக்கும் ஒரு நிசப்தம்
கலைத்திடு கலைத்திடு மனம் உரைக்கும்
பெண்:
மௌனத்தானே என்னுள் வழிந்தோடும் அன்பே
விட்டு விலகவா இல்லை தொடரவா சொல் தோழா
No comments:
Post a Comment