பல்லவி
வனிலா ஐஸ் க்ரிமே வெளியே வரலாமா
வெயிலில் நீ நடந்தால் சூரியனுக்கும் சளி பிடிக்கும்
உன்னை கண்டதும் கண்கள் உறைந்திடுமே
உன்னை பருகியதும் நெஞ்சம் குளிர்ந்திடுமே
பனி சிற்பமே என் பரவசம் நீ
வெண் புஷ்பமே ஒரு மதுரசம் நீ
சரணம் 1
சூடாக கரைகின்றாய் யாரின் மீதோ உன் கோபம்
லேசாக உருகுகிறாய் யாரின் மீதோ உன் காதல்
கல்லாக இருகின்றாய் ஆனாலும் ஈரம் கசிகின்றாய்
பாலாக சொறிகின்றாய் இதுவன்றோ தாய் பாசம்
ஜில்லென்ற அழகியின் ஜீம்பூம் பா-உன்னை
விரும்பாதவர் யாருண்டு சொல்லம்மா
சில்லென்ற தேகத்தை தீண்டிடவே -என்
இதழ்கள் சிலிர்ப்பது ஏனம்மா
வெண்மையிலே வெண்ணிலவும் தோற்கட்டுமே-ஒரு
ஆல்ப்ஸ் மலையே கைக்குள்ளே வந்ததிங்கே .....
சரணம் -2
தேனாக இனிகின்றாய் யாரினாலோ சந்தோசம்
மெதுவாக உருகுகிறாய் யார் பிரிவினாலோ உன்வருத்தம்
பனியாக இருந்தாலும் வாசம் நூறு வீசுகிறாய்
சில நிமிடம் இருந்தாலும் மன நிறைவை தருகிறாய்
ஜிவ்வென்ற விழிகளிலே குளிரென்ன -உன்
மேலாடை மெல்லவே விலகியதே
விர்ரென்று நரம்பில் போதையென்ன -உன்
முத்தங்கள் இதழுக்கு உணவன்றோ
வெண்பாலில் செய்ததோர் சித்திரமே -சில
நிமிடங்களில் மறைவது விசித்திரமே
வனிலா ஐஸ் க்ரிமே வெளியே வரலாமா
வெயிலில் நீ நடந்தால் சூரியனுக்கும் சளி பிடிக்கும்
உன்னை கண்டதும் கண்கள் உறைந்திடுமே
உன்னை பருகியதும் நெஞ்சம் குளிர்ந்திடுமே
பனி சிற்பமே என் பரவசம் நீ
வெண் புஷ்பமே ஒரு மதுரசம் நீ
சரணம் 1
சூடாக கரைகின்றாய் யாரின் மீதோ உன் கோபம்
லேசாக உருகுகிறாய் யாரின் மீதோ உன் காதல்
கல்லாக இருகின்றாய் ஆனாலும் ஈரம் கசிகின்றாய்
பாலாக சொறிகின்றாய் இதுவன்றோ தாய் பாசம்
ஜில்லென்ற அழகியின் ஜீம்பூம் பா-உன்னை
விரும்பாதவர் யாருண்டு சொல்லம்மா
சில்லென்ற தேகத்தை தீண்டிடவே -என்
இதழ்கள் சிலிர்ப்பது ஏனம்மா
வெண்மையிலே வெண்ணிலவும் தோற்கட்டுமே-ஒரு
ஆல்ப்ஸ் மலையே கைக்குள்ளே வந்ததிங்கே .....
சரணம் -2
தேனாக இனிகின்றாய் யாரினாலோ சந்தோசம்
மெதுவாக உருகுகிறாய் யார் பிரிவினாலோ உன்வருத்தம்
பனியாக இருந்தாலும் வாசம் நூறு வீசுகிறாய்
சில நிமிடம் இருந்தாலும் மன நிறைவை தருகிறாய்
ஜிவ்வென்ற விழிகளிலே குளிரென்ன -உன்
மேலாடை மெல்லவே விலகியதே
விர்ரென்று நரம்பில் போதையென்ன -உன்
முத்தங்கள் இதழுக்கு உணவன்றோ
வெண்பாலில் செய்ததோர் சித்திரமே -சில
நிமிடங்களில் மறைவது விசித்திரமே
No comments:
Post a Comment