Tuesday, May 30, 2017

                      பல்லவி
ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் மூச்சினிலே
பல ரிக்டர் அளவு நில நடுக்கம்  பேச்சினிலே
என் வீதியில் உன் காலடி புயல் சின்னமே
என் விதியில் ஒரு பேரிடி உன் ஞாபகமே
குருதியில் ஆழிபேரலை சீற்றங்களே
வெடிப்புகள் பலநூறடி  இதயத்திலே

                    சரணம்-1
நீ வங்கக் கடலா
நான் சென்னை நகரா
என்னை ஏன் மூழ்கடித்தாய்

நீ  மேட்டூர் அணையா
நான் தஞ்சை வயலா
என்னை ஏன் சாகடித்தாய்

நீ கொள்ளிடமோ - நான்
கொள்ளை போன இடமோ

நீ வீரணமோ -நான்
வெள்ளமான நிலமோ

கல்லணையில்  கரைபுரளும் காவிரியே-காதல்
சமுத்திரத்தில்  சங்கமிக்க வந்திடுவாய் .....



                          சரணம்-2

நீ காட்டு ஓடையா
நான் தண்டவாளமா
என்னை ஏன் தகர்த்தெறிந்தாய்

நீ கொட்டும் மழையா
நான் ஓட்டைக் குடையா
என்னை ஏன் நனைகின்றாய்

நீ செம்பரம்பாக்கமோ
நான் சென்னை நகரமோ

நீ ஏரி மதகோ
நான்  உடைப்பெடுத்த  கரையோ

தஞ்சையிலே நன்செய்  தந்த காவிரியே-காதல்
நஞ்சை  தந்து கொல்வதென்ன சொல்லடியே

 

No comments:

Post a Comment