பழைய வண்ணாரப்பேட்டை
நீண்ட இடைவேளைக்கு பின்(மூன்று முதல் நான்கு வருடத்திற்கு பிறகு) லோ பட்ஜெட் என்பதால் அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்த படம்.வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்ற சில பத்திரிக்கை விமர்சனம்(?) படித்து விட்டு பார்த்தால் இது கண்டிப்பாக வெற்றி மாறன் படம் போல் இல்லை.இது வேற லெவல்.யாரிடமும் உதவியாளராக பணி புரியாமல் மோகன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மட்டுமல்ல இயக்குனர் என தங்களை சொல்லி கொள்ளும் பல இயக்குனர்களும் பார்க்க வேண்டிய ஒரு நேர்மையான திரைப்படம்.இந்த படத்தை நான் பார்க்க காரணம் ஒரு தொலைபேசி அறிமுகத்தில் தேவையற்ற பில்ட் அப் தராமல் தொன்னூறு லட்சத்தில் மனசாட்சி உறுத்தல் இன்றி நேர்மையாக ஒரு படம் பண்ணியிருக்கேன்.பாத்துட்டு சொல்லுங்க ப்ரோ என மோகன் ஒற்றை வரியில் இப்படத்தை பற்றி கூறியது தான்.
இப்படத்தில் இடம் பெட்ர காட்சிகள் யாவும் உண்மை அல்ல என சாதாரண டைட்டில் கார்டில் அட போட வைக்கும் இயக்குனருடன் இசை அமைப்பாளர் ஜுபினுடன் மின்னும் வானம் பழைய வண்ணாரப்பேட்டை பாடல் என ஒளிப்பதிவாளர் பருக் கூட்டணி அமைக்க, மூவர் கூட்டணி கடைசி காட்சிவரை கைகோர்த்து பழைய வண்ணாரப்பேட்டையில் வெற்றி கொடி பறக்க விட்டுள்ளது.இடைவேளை டைட்டில் நச்யெனவும் மருத்துவமனை காட்சி போதனையாகவும் மெசேஜ் சொல்கிறது.முற்பாதியில் கலகலப்பாக படத்தை சம்மந்த பல கதாபாத்திரங்கள் பிற்பாதியில் கழற்றிவிடப்பட ப்ரஜன்,தீணா,ரிச்சர்ட் மூவரும் படத்தை சுமந்து செல்ல சிலுக்கு கதாபாத்திரமும்,கருணாஸும் படத்தை முடித்து வைக்க உதவியுள்ளனர்.சில இடங்களில் தெளிவற்ற வசனமும் இன்ஸ்பெக்டரின் விசாரணை என்று ஒன்று இல்லாததும் படத்தின் குறையெனினும் அதனால் படத்திற்கு ஒரு பாதகமும் இல்லை.
கலகலப்பான நண்பர்களின் கதையாய் தொடக்கி ஒரு நிறைவான சோசியோ த்ரில்லராக மதுவுக்கு எதிரான மெசேஜ் உடன் பட்ஜெட்டுக்கு மிஞ்சிய தரத்தில் நேர்மையாக தந்திருக்கும் இந்த மூவர் கூட்டணி புது நம்பிக்கையை தந்திருக்கிறது.
இயக்குனரின் அடுத்த படத்திற்கான கதையை தெரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் ,சரியான தயாரிப்பாளரும் நடிகர்களும் அமைந்தால் தமிழ் சினிமா அடுத்த லெவலில் காலடி எடுத்து வைக்கும் ....

No comments:
Post a Comment